தென்காசியில் 4 பேர் கொரோனாவுக்கு பலி


தென்காசியில் 4 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 1:37 AM IST (Updated: 13 Jun 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 176 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 354-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 223 பேர் குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயது, 55 வயது பெண்கள், 66 வயது முதியவர் மற்றும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயது முதியவர் என 4 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 423-ஆக உயர்ந்துள்ளது.

Next Story