போலீஸ் தேடிய வாலிபர் கைது
கும்பகோணத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சுற்றி வளைத்த போது அவர் மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சுற்றி வளைத்த போது அவர் மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
கும்பகோணம் அருகே உள்ள வளையபேட்டை பகுதியில் உள்ள ஆற்றில் இரவு நேரங்களில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 9-ந் தேதி இரவு வளையபேட்டை அக்ரஹாரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஆற்றில் ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே மணல் திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகள் தாங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். தாக்குதலில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை சக போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சுற்றி வளைத்தனர்
இது குறித்து செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். 3 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வளையப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ் (வயது25) தனது வீட்டில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விக்னேசை சுற்றிவளைத்தனர்.
மாடியில் இருந்து குதித்தார்
அப்போது போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற விக்னேஷ் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய் நேற்று கும்பகோணத்துக்கு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story