ஏரியூர் அருகே ரேஷன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஏரியூர் அருகே, முழு நேர ரேஷன் கடையை பகுதி நேர கடையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:
ஆர்ப்பாட்டம்
ஏரியூர் அருகே உள்ள எர்ரப்பட்டியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முழுநேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த முழுநேர கடையை பகுதிநேர கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் முழு நேர ரேஷன் கடையை பகுதி நேர கடையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று ரேஷன் கடை முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை
அப்போது ஊரடங்கு உள்ள நேரத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story