சேலத்தில் இருந்து மேட்டூருக்கு செல்லும் வழியில் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்


சேலத்தில் இருந்து மேட்டூருக்கு செல்லும் வழியில் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்
x
தினத்தந்தி 13 Jun 2021 2:54 AM IST (Updated: 13 Jun 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து மேட்டூருக்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

சேலம்:
சேலத்தில் இருந்து மேட்டூருக்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
பொதுமக்களின் மனுக்கள்
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிடுவதற்கு நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் இரவில் தங்கினார். அதன்பிறகு நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட காரில் புறப்பட்டார். 
அப்போது, அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தபோது, ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்தனர். இதைப் பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக காரில் இருந்து இறங்கி பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 
வரவேற்பு
அப்போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் அனைவரும் கவனமாக பணியாற்றவும், முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அழகாபுரம் பகுதியில் சாலையோரம் காத்திருந்த தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், காரில் வந்த மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
அப்போது, சாலையோரம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், கோரிக்கை மனுவோடு நின்று கொண்டிருந்ததை மு.க.ஸ்டாலின் பார்த்தார். இதையடுத்து காரை நிறுத்திய அவர், இறங்கி சென்று அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story