வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி: மலைவாழ் மக்கள் அலறியடித்து ஓட்டம்
வீடு,வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டதால் மலைவாழ் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
உப்பிலியபுரம்,
கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டதையடுத்து, உப்பிலியபுரம் பகுதிகளில் உப்பிலியபுரம், எரகுடி, பி.மேட்டூர், டாப்செங்காட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. டாக்டர் சம்பத் தலைமையிலான மருத்துவ குழுவினர், பச்சைமலையில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளான டாப்செங்காட்டுப்பட்டி, புத்தூர், தண்ணீர்பள்ளம் மற்றும் கடம்பூர் பகுதிகளில் வீடு,வீடாக சென்று தடுப்பூசி போட்டனர்.
பொது மக்கள் நூறு நாள் வேலை திட்டத்திற்கு சென்றதையறிந்து, மருத்துவ குழு அங்கே சென்றபோது, வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இருப்பினும் மருத்துவ குழுவினர் மலைவாழ் மக்களை விரட்டிச்சென்று துரத்திப்பிடித்தனர். நேற்று மட்டும் மலைவாழ் மக்கள் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story