திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறி திறந்திருந்த 13 கடைகளுக்கு ‘சீல்’


திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறி திறந்திருந்த 13 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 Jun 2021 3:18 PM IST (Updated: 13 Jun 2021 3:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் விதிமுறைகளை மீறி திறந்திருந்த 13 கடைகளுக்கு ‘சீல்’.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. ஊரடங்கையோட்டி ஜவுளிக் கடை, நகைக்கடை, செருப்பு கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அரசு உத்தரவை மீறி திருப்பத்தூரில் ஆலங்காயம் ரோடு, கிருஷ்ணகிரி ரோடு, வாணியம்பாடி ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், செருப்பு கடைகள், செல்போன் கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சென்று கடைகளை திறந்து வியாபாரம் செய்த ஜவுளிக் கடை, செல்போன் கடை, செருப்பு கடை என 13 கடைகளுக்கு சீல் வைத்தனர். 

Next Story