மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under thuggery law

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது.
விழுப்புரம்,

திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை பகுதியை சேர்ந்தவர் லோகு மகன் குமரன் (வயது 22). ரவுடியான இவர் மீது செஞ்சி பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக குமரனை, செஞ்சி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் குமரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து குமரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவல்லிக்கேணியில் வாலிபர் படுகொலை 3 பேர் வெறிச்செயல்
திருவல்லிக்கேணியில் வாலிபர் படுகொலை 3 பேர் வெறிச்செயல்.
2. அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது
அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது.
3. மயிலாப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் ஓட ஓட விரட்டி வாலிபர் படுகொலை
சென்னை மயிலாப்பூரில் முன் விரோதம் காரணமாக பட்டப்பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
4. கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது.
5. காஷ்மீரில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை; பயங்கரவாதி கைது
காஷ்மீரில் இரு பயங்கரவாத வழக்குகளில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாதியை கைது செய்துள்ளனர்.