ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூருக்கு மீண்டும் வடமாநில தொழிலாளர்கள் வர தொடங்கியுள்ளனர்.


ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூருக்கு மீண்டும் வடமாநில தொழிலாளர்கள் வர தொடங்கியுள்ளனர்.
x
தினத்தந்தி 13 Jun 2021 9:13 PM IST (Updated: 13 Jun 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூருக்கு மீண்டும் வடமாநில தொழிலாளர்கள் வர தொடங்கியுள்ளனர்.

திருப்பூர்
ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூருக்கு மீண்டும் வடமாநில தொழிலாளர்கள் வர தொடங்கியுள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. 
இதுபோல் இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 லட்சம் பேரும், வடமாநிலத்தினர் 3 லட்சம் பேரும் இருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை.
திருப்பூருக்கு வர தொடங்கிய
இதன் பின்னர் கொரோன பாதிப்பு குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கு ஒரு வாரம் என வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் கூடுதல் தளர்வாக பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு திரும்பி வர தொடங்கியுள்ளார்கள். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வருகிற வடமாநிலத்தினரிடம் போலீசாரும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அறிவுரை அளித்தும் அனுப்பிவைக்கிறார்கள்.

Next Story