தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளது. இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கட்சியினர் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்செந்தூர் கிருஷ்ணாநகரில் பா.ஜ.க. மாநில வர்த்தகர் அணி தலைவர் ராஜகண்ணன் தனது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதேபோல் மாவட்ட துணை தலைவர் செந்தில்வேல், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தங்கள் வீடுகளிலேயே ஆர்ப்பாட்டம் செய்து டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
எட்டயபுரம்-காயல்பட்டினம்
இதேபோல் எட்டயபுரத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய தலைவர் ராம்கி, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சங்கரலிங்கம், கிளை செயலாளர் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினம் நகர பா.ஜ.க. சார்பில் காயல்பட்டினம் எல்லார் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் பண்டாரம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பாப்பா, மகேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. துணை தலைவர் செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டார்.
தூத்துக்குடி-கோவில்பட்டி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் டூவிபுரத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் மான்சிங், ராஜீவ், ஓ.பி.சி.அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோவில்பட்டியில் பா.ஜனதாவினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வள்ளுவர் நகரில் பா.ஜ.க. நகர தலைவர் பாலசுப்பிரமணியன் வீட்டு முன்பு அவர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுச்செயலாளர்கள் முனியராஜ், சீனிவாசன், நகர துணைத் தலைவர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி கோவில் தெருவில் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் காளிதாசன் வீட்டு முன்பு அவர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், கிளைத் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story