கொரோனா தொற்று பரவல் காலத்தில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தினத்தந்தி 13 Jun 2021 9:24 PM IST (Updated: 13 Jun 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவல் காலத்தில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்
கொரோனா தொற்று பரவல் காலத்தில் மதுக்கடை திறக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
கொரோனா தொற்று நோய் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுக்கடையை நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர்  தி.மு.க. அரசை கண்டித்தும், மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் தங்களது வீடுகள் முன்பு கருப்புக்கொடிகளையும், பதாகைகளையும் கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செய்தித்தொடர்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் எஸ்.கே.கார்வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், மாவட்ட மருத்துவர் அணி துணைத்தலைவர் கார்த்திகா, நகர தலைவர் கோமதி சங்கர், முன்னாள் நகர தலைவர் ராஜா, ஈஸ்வரன், நாகராஜன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் இல்லத்தில் கருப்புக்கொடி ஏந்தி முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம்
திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் காங்கேயம் நகரம், தாராபுரம் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ரா.சிவபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவுள்ள தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பா.ஜ.க.  மாவட்ட அமைப்புசாரா துணைத்தலைவர் துரைசாமி, நகர துணைத்தலைவர்கள் தணிகாசலம், சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story