நாளை முதல் வழங்குவதற்கு உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது.

நாளை முதல் வழங்குவதற்கு உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது.
x
தினத்தந்தி 13 Jun 2021 9:33 PM IST (Updated: 13 Jun 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் வழங்குவதற்கு உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது.

உடுமலை
நாளை முதல் வழங்குவதற்கு உடுமலை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது.
14 வகை மளிகை பொருட்கள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைத்து, மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்தமாதம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது தவணைக்கான தொகை ரூ.2 ஆயிரம் இந்த மாதம்  வழங்கப்படும் என்றும், இந்த தொகைவழங்கப்படும்போது கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம்பருப்பு, புளி, துவரம்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், சோப்பு உள்ளிட்ட 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பும் சேர்த்து வழங்கப்படும் என்றும் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கொரோனா 2-வது நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 3-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
 நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு
இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளில் இவை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அந்தந்த ரேஷன்கடைகளில் வழங்கப்பட உள்ளது. 2-வது தவணை நிவாரண தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பு வாங்குவதற்கு ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வரும்போது, ரேஷன் கடைகளில் கூட்டத்தை குறைக்கும் வகையில், ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.
 நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கனில் அந்த ரேஷன் அட்டைதாரர், ரேஷன் கடைக்கு எந்த தேதியில் எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைகளுக்கு அனுப்பும் பணி
இந்த நிலையில் 14 வகை மளிகைப்பொருட்கள் கொண்ட பண்டல்கள் உடுமலை அருகே பூலாங்கிணரில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இருந்து, உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் உடுமலை நகர கூட்டுறவு பண்டக சாலை உள்ளிட்ட, ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் அலுவலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து அந்தந்த அலுவலகங்களில் இருந்து, அந்தந்த ரேஷன்கடைகளுக்கு மளிகைப்பொருட்கள் பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ரேஷன்கடைகளில், அந்த பண்டல்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பையிலும் 14 வகை மளிகைப்பொருட்கள் பாக்கெட்டுகளை போட்டு, ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்குவதற்கு தயாராக வைத்திருக்கும் பணிகள் தொடங்கியது. 
183 கடைகள்
இந்த பணிகளை ரேஷன்கடை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன்கடைகளில் இந்த பொருட்கள் மற்றும் 2-வது தவணை கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது.
உடுமலை தாலுகாவில் 127 முழு நேர ரேஷன்கடைகளும், 56 பகுதி நேர ரேஷன்கடைகளும் என மொத்தம் 183 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகள் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 30 உள்ளன.

Next Story