உடுமலையை அடுத்த பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
உடுமலையை அடுத்த பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
தளி,
உடுமலையை அடுத்த பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2-வது அலையை தடுத்து உயிர்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி என்ற மிகப்பெரிய ஆயுதத்தை கொண்டு பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தும் நோய் பரவலை தடுத்தும் ஏராளமானோரை குணப்படுத்தி வருகிறது. ஆனால் தடுப்பூசியை செலுத்துவதில் உடுமலையை அடுத்த பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் செவிலியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தடுப்பூசி போட ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பே டாக்டர் மற்றும் நர்சுகள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து விடுகின்றனர். ஊசி போடும் தகவல் தெரிந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க ஊராட்சி மன்ற நிர்வாகிகளும் தங்கள் பங்கிற்கு தெரிந்தவர்கள், நண்பர்களை வரவழைத்து ஊசி போட்டு அனுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் 200 டோஸ் தடுப்பூசி ஆஸ்பத்திரிக்கு வந்தது. அதில் சுமார் 70 டோஸ்கள் உள்ளூர் நபர்களுக்கு போடப்பட்டது. மீதமுள்ள 130 டோஸ்களும் போடிபட்டி, பூலாங்கிணர், குடிமங்கலம் உள்ளிட்ட சம்பந்தமில்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு போடப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதனால் பேரிடர் காலத்தில் திறம்பட செயலாற்றி வருகின்ற அரசு மீது அவப்பெயர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்ற டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி தடுப்பூசி வருகின்ற தகவலை வெளிப்படையாக தெரிவித்து அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் வாளவாடி பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகபரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story