வேடபட்டி துங்காவி சாலையில் பழுதடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


வேடபட்டி துங்காவி சாலையில் பழுதடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 10:00 PM IST (Updated: 13 Jun 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

வேடபட்டி துங்காவி சாலையில் பழுதடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அருகே உள்ள வேடபட்டி-துங்காவி சாலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைமட்டப்பாலத்தின் வழியாக துங்காவி, வேடபட்டி, மெட்ராத்தி, தாந்தோணி, ஜோத்தம்பட்டி, மைவாடி, கணியூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள இந்த தரைமட்ட பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் சேதமடைத்துள்ளன. மேலும் கான்கிரீட் பூச்சுகள் ஆங்காங்கே சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்விளக்குகள் இல்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விடவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேடபட்டி-துங்காவி பகுதியில் அமைந்துள்ள தரைமட்டப்பாலத்தை பார்வையிட்டு, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story