ஊட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடல் அருகே நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே டாஸ்மாக் கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது. இதை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குன்னூரில் பா.ஜனதாவினர் மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகளும் டாஸ்மாக் கடையை திறக்காதே என்று வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story