கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளாட்சித்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிகாதேவி காலனியில் 114 குடும்பங்களுக்கு பேரூராட்சி சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவு தொகுப்பை வழங்கினர்.
Related Tags :
Next Story