அனுமதி பெறாமல் உணவு பொருட்கள் தயாரித்த வியாபாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


அனுமதி பெறாமல் உணவு பொருட்கள் தயாரித்த வியாபாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:08 PM IST (Updated: 13 Jun 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

அனுமதி பெறாமல் உணவு பொருட்கள் தயாரித்த வியாபாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை மீறும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறி, மளிகை பொருட்களை விற்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதை பின்பற்றி நகராட்சி பகுதியில் நடமாடும் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடலூர் காளம்புழா பகுதியில் அனுமதி பெறாமல் பேக்கரி உணவு பொருட்கள் தயாரித்து விற்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையிலான அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

 இதில், அனுமதி பெறாமல் பேக்கரி உணவு பொருட்கள் தயாரித்து வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாததால் சம்பந்தப்பட்ட வியாபாரி சந்திரபோசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story