ஆற்காடு அருகே அரசுக்கு சொந்தமான 18 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு


ஆற்காடு அருகே அரசுக்கு சொந்தமான 18 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 10:09 PM IST (Updated: 13 Jun 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே அரசுக்கு சொந்தமான 18 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு

ஆற்காடு

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவருடன் ஏழு பேர் கொண்ட கும்பல் பல்வேறு இடங்களில் பனை மரங்களை வெட்டி, லாரி மூலம் செங்கல் சூளைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டம் மோரணம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர், வெங்கடாஜலபதிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதி கிராமங்களில் உள்ள பனை மரங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். 

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு அடுத்த ஓழலை கிராமத்தில் ஆதிலட்சுமி என்பவர் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடத்தை கையகப்படுத்தி பராமரித்து வந்துள்ளார். அந்த இடத்தில் 18 பனை மரங்கள் இருந்துள்ளது. அதனை முரளி ரூ.1,800 விலைபேசி, லட்சுமிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து 18 பனை மரங்களையும் வெங்கடாஜலபதி வெட்டி சாய்த்து உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஆற்காடு தாசில்தார் காமாட்சிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறையினர், லாரியில் பனை மரங்களை ஏற்றிக் கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பனைமர கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து, வெங்கடாஜலபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story