டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி  பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:37 PM IST (Updated: 13 Jun 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறிவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் ஊரடங்கு தளர்வில் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இந்தநிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதால் அருப்புக்கோட்டை காந்தி மைதானம், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினர் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்ட தி.மு.க. அரசை கண்டித்தும் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கண்டன முழக்கம்
ஆர்ப்பாட்டத்தின்போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், டீக்கடையில் பரவும் கொரோனா டாஸ் மாக்கில் பரவாதா பெண்களின் வாழ்க்கையோடு விளையா டாதே என்பதுபோன்ற கண்டன முழக்கங்களை எழுப்பினர். 
காந்தி மைதானத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமையிலும், நெசவாளர் காலனியில் நகர தலைவர் காளிமுத்துகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய தலைவர் செல்வ தேன்கனி தலைமை தாங்கினார். இனாம் கரிசல்குளம் ஹவுசிங் போர்டு, வடக்கு கரிசல்குளம், ராமலிங்கபுரம், வைத்தியலிங்கபுரம், வன்னியம்பட்டி மற்றும் பல கிராமங் களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் போத்திராஜ், டாக்டர் சிங்கராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் இளையராஜா, ஜெயம் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story