மணிலா விதை தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை


மணிலா விதை தட்டுப்பாடின்றி  கிடைக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 10:48 PM IST (Updated: 13 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

மானாவாரி பயிர் செய்வதற்காக மணிலா விதை தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும், என மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலசக்கம்

மணிலா விதை

கலசபாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் மானாவாரி பயிர் செய்வதற்காக தங்கள் நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆண்டு தோறும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மணிலா பயிரிடுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத் துறை அலுவலகங்களுக்கு சென்று மணிலா விதை கேட்டனர். அப்போது வேளாண்மைத் துறை அதிகாரிகள், இந்த ஆண்டு மணிலா விதை குறைவாக வந்தது. அது, அனைத்தும் தீர்ந்து விட்டது. மேலும் வந்தால் தான் வழங்க முடியும், என்றனர்.

இதுகுறித்து வேளாண்ைமத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம், ஆதமங்கலம்புதூர், புதுப்பாளையம் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் விதை மணிலாக்கள் மானிய விலையில் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பரவலாக மழைப் பெய்துள்ளதால் அனைத்து விவசாயிகளுக்கும் மணிலா விதை தேவைப்படுகிறது. இதனால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, என்றார்.

கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி இருக்கின்ற விவசாயிகளுக்கு தற்போது மானாவாரியில் பயிரிடுவதற்காக தேவையான மணிலா விதை தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story