தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு


தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 13 Jun 2021 10:54 PM IST (Updated: 13 Jun 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் சிறுவள்ளிக்குப்பம், தொரவி, வெட்டுக்காடு கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்க அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, தடை செய்யப்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களுக்கு குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கப்படுகிறதா? எனவும், கிராம தெருக்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா எனவும், பொதுமக்களுக்கு காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா எனவும், ஊராட்சிகளில் சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Next Story