குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து


குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Jun 2021 10:55 PM IST (Updated: 13 Jun 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
கரூர் மாவட்டம் தெற்கு வள்ளுவர் நகர் குடியிருப்புபகுதியில் இருந்த வெற்றிடத்தில் பலவகையான மரங்கள் வளர்ந்துள்ளன. வெயிலின் தாக்கம் காரணமாகவும், மழை இல்லாததாலும் மரங்கள் காய்ந்து இருந்தது. இந்நிலையில் காய்ந்த மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி எரிய ஆரம்பித்தது.  இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து மரங்களில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். இதனால்  பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story