12,100 கொரோனா தடுப்பூசிகள் வந்தன


12,100 கொரோனா தடுப்பூசிகள் வந்தன
x
தினத்தந்தி 13 Jun 2021 11:07 PM IST (Updated: 13 Jun 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் வந்தன. அவை இன்று (திங்கட்கிழமை) 26 முகாம்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் வந்தன. அவை இன்று (திங்கட்கிழமை) 26 முகாம்களில் பொதுமக்களுக்கு போடப்படுகிறது.
12,100 தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணியில் அடிக்கடி தொய்வு ஏற்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று மதியம் 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 4,100 கோவேக்சின் தடுப்பூசியும் என 12 ஆயிரத்து 100 தடுப்பூசி குமரி மாவட்டத்துக்கு வந்தன. அவற்றை பொதுமக்களுக்கு செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. 
26 முகாம்கள்
அதாவது நாகர்கோவிலில் இந்து கல்லூரி, டதி பள்ளி, அலோசியஸ் பள்ளி, டி.வி.டி. பள்ளி மற்றும் கார்மல் பள்ளி ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 
இதுதவிர மாவட்டம் முழுவதும் முன்சிறை ஒன்றியத்தில் அம்சி அரசு தொடக்கப்பள்ளி, ஏழுதேசபத்து அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் ஒன்றியத்தில் அண்டூர் அரசு நடுநிலைப்பள்ளி, கண்ணூர் அரசு உயர்நிலை பள்ளி, மேல்புறம் ஒன்றியத்தில் மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி, புலியூர்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மணக்கரை அரசு நடுநிலைப்பள்ளி, குமாரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, ஒழிப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி, குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, தாழக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 26 இடங்களில் முகாம் அமைத்து இன்று (திங்கட்கிழமை) தடுப்பூசி போடப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story