வீடுகளின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம். டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு
வீடுகளின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவால் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வாக இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. செயலாளர் கார்த்தியாயினி வேலூர் கிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தார். இதில், அவரின் 2 குழந்தைகளும் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோன்று வேலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தசரதன் சேவூரில் உள்ள வீட்டின் முன்பும், மாவட்ட பொதுசெயலாளர் எஸ்.எல்.பாபு சலவன்பேட்டையில் உள்ள வீட்டின் முன்பும், மாவட்ட துணைத்தலைவர் ஜெகன்நாதன் காட்பாடி காந்திநகரில் உள்ள வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story