தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி-211 பேருக்கு தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர். மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கபடுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,502 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 320 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,388 ஆகும். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 172 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22419 ஆகும்.
Related Tags :
Next Story