117 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி


117 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 6:35 PM GMT (Updated: 13 Jun 2021 6:35 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த 7 பேர் இறந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 117 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 800 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 117 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 402 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 90 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 308 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்கள்.

Next Story