கபிலர்மலை அருகே வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்றவர் கைது 40 லிட்டர் ஊறல் அழிப்பு
கபிலர்மலை அருகே வீட்டில் சாராயம் காய்ச்ச முயன்றவர் கைது 40 லிட்டர் ஊறல் அழிப்பு
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கபிலர்மலை அருகே பெரியசோளிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காச்சுவதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஜேடர்பாளையம் போலீசார் பெரியசோளிபாளயத்தை சேர்ந்த அர்ச்சுனன் (வயது 45) என்பவரது வீீ்ட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். வீட்டிலேயே சாராயம் காய்ச்ச முயன்ற அர்ச்சுனனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story