பட்டதாரி காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


பட்டதாரி காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 14 Jun 2021 12:27 AM IST (Updated: 14 Jun 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பட்டதாரி காதல்ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் பட்டதாரி காதல்ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோப்புக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கவுசல்யா (வயது21). பி.எஸ்சி. பட்டதாரி. ராமநாதபுரம் வழுதூர் பகுதி சந்திரன் மகன் விஜய் (30) பி.இ.பட்டதாரி. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

போலீசில் தஞ்சம்

இதனை தொடர்ந்து காதலர்கள் இருவரும் ராமநாதபுரம் அருகே குயவன்குடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்து தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து விசாரணை செய்து உரிய பாதுகாப்பு வழங்க ராமநாதபுரம் மகளிர் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.இரு குடும்பத்தாரையும் ராமநாதபுரம் மகளிர் போலீசார் அழைத்து விசாரணை செய்து சமரசம் செய்து காதல் திருமண ஜோடிகளுடன் அனுப்பி வைத்தனர்.

Next Story