மோட்டார்சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
பணகுடியில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பணகுடி:
பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர் சம்பவத்தன்று பணகுடி பஜாரில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பணகுடியில் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு ப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பணகுடி அழகியநம்பிபுரம் நடராஜன் மகன் அருண் (21), பணகுடி சர்வோதய தெரு சுப்பிரமணியன் மகன் கவுதம் (எ) சங்கர் (20) என்பதும், ராஜேசுக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றதும் தெரியவந்ததது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளையும் மீட்டனர்.
Related Tags :
Next Story