டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
35 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது.
பெரம்பலூர்:
டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் திண்டாடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், கூடுதல் தளர்வுகளாக தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்திருந்தது.
முன்னேற்பாடு பணிகள்
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 36 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன. இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மும்முரமாக நடைபெற்றன. கடைகளுக்கு மது வாங்க வரும் மது பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்பு கட்டைகளை அமைத்தல், மது பிரியர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க கடைக்கு முன்பு சாமியானா பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள், கட்டங்கள் வரையும் பணியும் நடைபெற்றது.
இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, முக கவசம், சமூக இடைவெளி போன்ற அரசின் நிபந்தனைகளுடன் போலீசார் பாதுகாப்புடன் மது பாட்டில்கள் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படவுள்ளது. 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மது பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story