பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 12:53 AM IST (Updated: 14 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு, கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் தொடர்ந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்ட தளர்வில் டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று (திங்கட்கிழமை) திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அரசு மதுபான கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பெரம்பலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மதனகோபாலபுரத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட நிர்வாகிகள், பட்டியல் பிரிவு மற்றும் பிரசார பிரிவு நிர்வாகிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் கட்சி அலுவலகத்தின் முன்பு கல்வியாளர் பிரிவின் மாவட்டத் தலைவர் உமாஹைமவதி செல்வராஜ் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Next Story