34 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் திறப்பு; டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியுடன் மது வாங்கிச் செல்ல ஏற்பாடு


34 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் திறப்பு; டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியுடன் மது வாங்கிச் செல்ல ஏற்பாடு
x
தினத்தந்தி 14 Jun 2021 12:58 AM IST (Updated: 14 Jun 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் மது வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:
34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் மது வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு காரணமாக, கடந்த மாதம் 10-ந்தேதியில் இருந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முன்பாக கடந்த 3 நாட்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.30 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக, 34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் 98 மதுக்கடைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 69 மதுக்கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சமூக இடைவெளியுடன் வாங்கிச்செல்ல...

டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக 14 கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மதுக்கடையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கடைகளுக்கு வருகிறவர்கள் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடை வளாகத்துக்குள் நுழையும் மது பிரியர்களுக்கு கையில் கிருமி நாசினி திரவம் தெளிக்க வேண்டும். மேலும் அவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மது வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளின் முன்பு கம்புகளை கொண்டு தடுப்பு வழிகள் அமைக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் நிற்கும் வகையில் பிளீச்சிங் பவுடரை கொண்டு வட்டங்கள் வரையப்பட்டன.

Next Story