200 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் பகுதியில் ஊரடங்கு விதி மீறலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் இருந்து போலீசார் 200 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் பகுதியில் ஊரடங்கு விதி மீறலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் இருந்து போலீசார் 200 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தளர்களுடன் ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
27 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டம் உள்பட 11 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறையவில்லை. இதனால் ஒருசில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இந்த நிலையில் ஊரடங்கு காலங்களில் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை சேதுபாவாசத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையம் அருகே போலீசார் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story