திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி; புதிதாக 413 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியானார்கள். புதிதாக 413 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 52 ஆக உயர்ந்து உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பூரண குணமடைந்து நேற்று 875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 483 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 621, ஆக்சிஜன் வசதி அல்லாத படுக்கைகள் 1,144,தீவிர சிகிச்சை பிரிவில் 192 என மொத்தம் 1,857 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story