கொப்பம்பட்டியில் தீ விபத்து: புதிய மின்மாற்றி நிறுவப்பட்டு மின்வினியோகம் சீரடைந்தது
கொப்பம்பட்டியில் தீ விபத்தில் சேதமடைந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின்மாற்றி நிறுவப்பட்டு மின்வினியோகம் சீரடைந்தது
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி துணை மின்நிலையத்தில், கடந்த வாரம் மின்னல் தாக்கி மின்மாற்றி தீ பிடித்து உருக்குலைந்தது. போர்க்கால அடிப்படையில், பணிகள் முடிக்கி விடப்பட்டு புதிய 10 மெகாவோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட மின்மாற்றி நிறுவப்பட்டு, நேற்று மாலை தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி கோட்ட தலைமைப் பொறியாளர் அருள்மொழி, மாவட்ட கட்டுமான பணி மேற்பார்வையாளர்கள் ராஜகுணசீலன், கிருஷ்ணமூர்த்தி, துறையூர் மின்கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார், கொப்பம்பட்டி செயற்பொறியாளர் ஜேம்ஸ் ஆகியோர் நிறைவுப்பணியில் ஈடுபட்டனர். இதனால், டி.முருங்கப்பட்டி மற்றும் டி.ரெங்கநாதபுரம் துணை மின்நிலையங்களுக்கான மின் வினியோகம் சீர்செய்யப்பட்டது.
Related Tags :
Next Story