350 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


350 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 1:33 AM IST (Updated: 14 Jun 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டை, அன்னவாசலில் 350 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை
  கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரடிபட்டி கிராமத்தில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான போர் ஷெட்டில் 150 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. சாராய ஊறல் போட்டதாக அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 40), இளவரசன் (33), முருகேசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல வேலாடிப்பட்டி ஒத்த வீட்டைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் விக்னேஷ் (26) என்பவர் வீட்டின் அருகில் 100 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.  அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் சீகம்பட்டி செட்டிகுளம் கண்மாய் குளப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் 100 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. சாராய ஊறல் போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story