புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலியாகினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தொற்று அதிகமாக இருந்த நிலையில ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தவர்களில் 260 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 1,523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் கொரோனா தொற்று பாதித்தவர்களில் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மேலும் 7 பேர் பலியாகினர். இதனால் இறப்பு எண்ணிக்கை 266 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story