பழுதடைந்த ஸ்கேன் எந்திரத்தை பழுது நீக்க அமைச்சர் உத்தரவு


பழுதடைந்த ஸ்கேன் எந்திரத்தை பழுது நீக்க அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2021 1:57 AM IST (Updated: 14 Jun 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த ஸ்கேன் எந்திரத்தை பழுது நீக்க அமைச்சர் உத்தரவிட்டார்

கீரமங்கலம்
கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவரிடம் மருத்துவ ஊழியர்கள், தாங்கள் தங்குவதற்கு குடியிருப்பு வேண்டும். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு ஓய்வறை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  பொதுமக்களுக்கு உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் கண்டறியும் கருவிகள் போதிய அளவு இல்லை, கிராம செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறினார்கள். அதன்பேரில் அவர் உடனே அறந்தாங்கி சுகாதார துணை இயக்குனரை செல்பேசியில் தொடர்பு கொண்டு பரிசோதனை கருவிகள் வழங்க ஏற்பாடு செய்தார்.அப்போது அங்கு நின்ற ஒருவர், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை நடக்கிறது. ஆனால், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அதற்கான ஸ்கேன் எந்திரம் பழுதாகியுள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்ய முடியவில்லை என்றார். இதுபற்றி அருகில் நின்ற மருத்துவ அலுவலர் சித்ராதேவியிடம் விவரம் கேட்டறிந்த அமைச்சர், அதிகாரிககளை தொடர்பு கொண்டு உடனே ஸ்கேன் எந்திரத்தை பழுது நீக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சுகாதார நிலையத்திற்கு தேவையான முககவசம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கிய அமைச்சர் சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.


Next Story