புதுமாப்பிள்ளையை நள்ளிரவில் தீ வைத்து எரித்த கள்ளக்காதலி கைது
அரிமளம் அருகே புதுமாப்பிள்ளையை நள்ளிரவில் தீ வைத்து எரித்த கள்ளக்காதலி கைது செய்யப்பட்டார்
அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற பாலகிருஷ்ணன் (வயது 25). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதா (32) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சதீஷ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் நேற்று (13-ந் தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இதன் காரணமாக கள்ளக்காதலியுடன் சதீஷ்குமார் கடந்த ஒரு மாதமாக பேசவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராதா, நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு வா என்று அழைத்துள்ளார். கள்ளக்காதலி அழைத்ததன்பேரில் சதீஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு ராதா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கேயே அவர் அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது எழுந்த ராதா, சதீஷ்குமார் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்திருக்கிறார். அப்போது சதீஷ்குமாரின் உடலில் தீப்பற்றி எரியவே அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சதீஷ்குமாரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப்பதிவு செய்து ராதாவை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தன. சதீஷ்குமாருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த ராதாவின் கணவன் ஜெயக்குமார் ஏற்கனவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பிறகும், சதீஷ்குமாருடனான கள்ளக்காதலை ராதா கைவிடவில்லை. நேற்று வேறு ஒரு பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இனிமேல் சதீஷ்குமார் நமக்கு கிடைக்க மாட்டார் என்ற விரக்தியிலும், உன்னால் தானே நான் என் கணவரை இழந்தேன் என்ற வேதனையிலும் சதீஷ்குமார் மீது ராதா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் என்பது தரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ராதாவிற்கு 19 வயதில் மகளும், 16 வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story