நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம்
மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.
மதுரை
மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு பெட்டிகள்
மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட தென்மாவட்டங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு சில ரெயில்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான பயணிகளே பயணம் செய்கின்றனர். அதனை தொடர்ந்து, ஒரு சில தென்மாவட்ட ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நெல்லையில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 2 ரெயில்களிலும் வருகிற 16-ந் தேதி முதல் ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி நீக்கப்படுகிறது. இந்த பெட்டிகள் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ரெயில்களில் அனைத்து வகுப்புகளிலும் 22 பெட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்துநகர் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி-சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் தலா ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 25-ந் தேதி வரை நீக்கப்படுகிறது.
Related Tags :
Next Story