சேலம் மாவட்டத்தில் மேலும் 855 பேருக்கு கொரோனா பாதிப்பு 11 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் மேலும் 855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
855 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 894 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 122 பேர், எடப்பாடி ஒன்றியத்தில் 54 பேர், மகுடஞ்சாவடியில் 32 பேர், சங்ககிரியில் 33 பேர், ஓமலூரில் 41 பேர், கொளத்தூரில் 20 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 28 பேர், தாரமங்கலத்தில் 29 பேர், வீரபாண்டியில் 26 பேர், ஆத்தூரில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காடையாம்பட்டியில் 3 பேர், கொங்கணாபுரத்தில் 4 பேர், மேச்சேரியில் 16 பேர், நங்கவள்ளியில் 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 15 பேர், கெங்கவல்லியில் 17 பேர், பனமரத்துப்பட்டியில் 16 பேர், பெத்தநாயக்கன் பாளையத்தில் 14 பேர், தலைவாசலில் 26 பேர், வாழப்பாடியில் 15 பேர், ஏற்காட்டில் 4 பேர், ஆத்தூர் நகராட்சியில் 19 பேர், மேட்டூர் நகராட்சியில் 20 பேர், எடப்பாடி நகராட்சியில் ஒருவர், நரசிங்கபுரம் நகராட்சியில் 7 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
79,338 ஆக அதிகரிப்பு
இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து வந்த 18 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த 25 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 24 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 26 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 14 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 25 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 22 பேர், கடலூரில் இருந்து வந்த 16 பேர், கரூரில் இருந்து வந்த 19 பேர், கோவையில் இருந்து வந்த 12 பேர், வேலூரில் இருந்து வந்த 15 பேர், திருச்சியில் இருந்து வந்த 16 பேர், சிதம்பரத்தில் இருந்து வந்த 19 பேர், பெரம்பலூரில் இருந்து வந்த 17 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,400 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 8 ஆயிரத்து 754 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 பேர் பலி
அதேநேரத்தில் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 1,255 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story