கொரோனா விதிகளை மீறிய 2 கடைகளுக்கு சீல் வைப்பு


கொரோனா விதிகளை மீறிய 2 கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 4:27 AM IST (Updated: 14 Jun 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிகளை மீறிய 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆத்தூர்:
ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் ஊரடங்கை மீறி ஒரு துணிக்கடை, கொலுசு கடை செயல்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் அந்த கடைக்காரர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், நகரசபை துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் அந்த இரு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story