வீட்டின் அருகே மரப்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்த தொழிலாளி கைது
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த சந்தானம் (வயது 37). கூலித்தொழிலாளி. ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவரது வீட்டின் அருகே உள்ள மரப்புதரில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி சந்தானத்தை கைது செய்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story