நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்ற மதுபிரியர்கள். மேளம் அடித்து கொண்டாட்டம்
35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் வரிசையில் நின்று மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். செய்யாறில் மேளம் அடித்து கொண்டாடினர்.
திருவண்ணாமலை
டாஸ்மாக் கடைகள் திறப்பு
கொரோனா தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி மாலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 218 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு படிப்படியாக தளர்வுகள் செய்து வருகி்றது. இதில் காைல 10 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சமூக இடைவெளி
அரசு அறிவிப்பின்படி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. முன்னதாக கடைகள் முன்பு கம்புகளாலும், தகர சீட்டுகளாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக வட்டமிடப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பே மதுபிரியர்கள் வரிசையில் நிற்க தொடங்கினர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு 35 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் ஆர்வமாக வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
மேலும் வரிசையில் நின்ற மதுபிரியர்களுக்கு கைகளுக்கு சானிடைசர்ஸ் பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
பெரும்பாலான போலீசார் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் மதுபானம் வாங்க கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. வழக்கமாக நீண்ட நாட்கள் கழித்து கடை திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் 2, 3 என மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அதனால் இருமடங்கு வியாபாரம் நடைபெற்று இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேளம் அடித்து கொண்டாட்டம்
செய்யாறு தாலுகா வாழ்குடை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்ததற்கு அங்குள்ள விவசாயிகளும், மதுபானப் பிரியர்களும் ஆதரவு தெரிவித்து, டாஸ்மாக் கடை முன்பு கைகளில் கரும்பை ஏந்தியவாறு மேளம் அடித்து, மதுபானப் பிரியர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், ஊறுகாய் பாக்கெட்டுகள், சிப்ஸ் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Related Tags :
Next Story