திருப்பூருக்கு மேலும் தளர்வுகள் அறிவித்ததால் 25 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் இயங்கின.
திருப்பூருக்கு மேலும் தளர்வுகள் அறிவித்ததால் 25 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் இயங்கின.
திருப்பூர்
திருப்பூருக்கு மேலும் தளர்வுகள் அறிவித்ததால் 25 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் இயங்கின.
ஏற்றுமதி நிறுவனங்கள்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டு உள்ளது. முதலில் தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்தது. திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து திருப்பூரில் அதிகரித்து வந்ததால் பனியன் நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வந்தது.
25 சதவீத தொழிலாளர்களுடன்
இதற்கிடையே தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் வருகிற 21-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் கொரோனா பாதிப்பு அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சில கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கத்தொடங்கின. இதற்கிடையே மேலும் தளர்வாக 25 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் திருப்பூரில் 25 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கின. தொழிலாளர்களும் உற்சாகமாக ஆடை தயாரிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story