கொலை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


கொலை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2021 9:29 PM IST (Updated: 14 Jun 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கலவை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேற்று கலவை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை போலீசார் வரவேற்றனர். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். 
அப்போது சொரையூர் கூட்ரோடு, ஆரூர் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள கொலை சம்பந்தப்பட்ட வழக்குகளையும் உடனடியாக முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கட்டப்பஞ்சாயத்துக்காக போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் கலவை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story