உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் நேற்று வந்தனர். மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் நேற்று வந்தனர் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
உடுமலை
உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் நேற்று வந்தனர். மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
உடுமலை கல்வி மாவட்டம்
கடந்த ஜூன்1-ந்தேதி புதிய கல்வி ஆண்டு தொடங்கியது. அதனால், பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி பணிகளை தொடங்குவதற்கு அரசு, கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 14-ந்தேதி முதல் பணிக்கு வரவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பள்ளிகளில் முதல்கட்டமாக நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய 3 வட்டாரங்களை கொண்ட உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 16, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 5 என 21 மேல்நிலைப்பள்ளிகளும், அரசு உயர்நிலைப்பள்ளிகள் 17 ம் உள்ளன. அரசு தொடக்கப்பள்ளிகள் 187-ம், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் 10-ம், அரசு நடுநிலைப்பள்ளிகள் 45-ம், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றும் உள்ளன.
தலைமை ஆசிரியர்கள் வருகை
இந்த நிலையில் தமிழக அரசு கல்வித்துறையின் உத்தரவுப்படி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த கல்வியாண்டிற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
மாணவர்கள் சேர்க்கைக்காக ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, பள்ளியின் நுழைவு வாயிலில், கைகளில் தேய்த்துக்கொள்வதற்காக கிருமிநாசினி வழங்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
கல்வி அதிகாரி ஆய்வு
பள்ளிகள் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து நேற்று உடுமலை மாவட்ட கல்வி அலுவலர் கே.பழனிசாமி, உடுமலை ஶ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறை ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றும், இதற்கான பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக தூய்மை பணியாளர்களைக்கொண்டு மேற்கொள்ளும்படியும், தலைமையாசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகளை செய்து தரும்படி உள்ளாட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story