மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆறு புதர்மண்டிக் கிடப்பதால் நீரோட்டத்தில் தடை ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x
தினத்தந்தி 14 Jun 2021 9:47 PM IST (Updated: 14 Jun 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆறு புதர்மண்டிக் கிடப்பதால் நீரோட்டத்தில் தடை ஏற்படுவதுடன் பொதுமக்கள் அச்சமடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி

குடிநீர்திட்டங்கள்
உடுமலையை அடுத்த அமராவதி அணையை நீராதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் அமராவதி ஆற்றங்கரையோர கிராமங்கள் பயன்பெறும் வகையில் நூற்றுக்கணக்கான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய என்று பலவகைகளில் மக்களுடன் இரண்டறக் கலந்துள்ளது அமராவதி ஆறு.  
 இந்த நிலையில் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றினுள் பல இடங்களில் புதர் மண்டிக் கிடப்பதால் சீரான நீரோட்டத்துக்குத் தடை ஏற்படுகிறது. இதனால் அதிக அளவில் நீரிழப்பு ஏற்பட்டு, பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் அருகிலுள்ள விளைநிலங்களில் ஆற்று நீர் புகுந்து சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சமூக விரோத செயல்கள்
மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்துக்கு அருகில் பொதுமக்கள் அதிக அளவில் குளிக்கவும் துணி துவைக்கவும் அமராவதி ஆற்றைப் பயன்படுத்துகின்றனர். இங்கு அதிக அளவில் புதர் மண்டியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே குளிக்க வேண்டிய நிலை உள்ளது. 
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அமராவதி ஆற்றில் புதர்கள் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இந்த புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் புதர் மறைவை சாதகமாகப் பயன்படுத்தி மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஒருசிலர் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழித்தடமும் புதர்மண்டியும் துர்நாற்றம் வீசும் நிலையிலும் உள்ளது. எனவே அமராவதி ஆற்றுக்கு கோவிலுக்கு தீர்த்தம் எடுக்கச் செல்லும் பக்தர்கள் மற்றும் பெண்கள் அச்சமடையும் நிலையும், முகம் சுளிக்கும் நிலையும் உள்ளது. எனவே அமராவதி ஆற்றிலுள்ள புதர்களை அகற்றவும், வழித்தடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென இந்த பகுதிகளில் படித்துறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பொதுமக்கள் கூறினர். 

Next Story