முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்


முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:13 PM IST (Updated: 14 Jun 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோவை

சம்பளத்தை உயர்த்தி  வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் முதுகலை மருத்துவ மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து முதுகலை மருத்துவ மாணவர்கள் கூறியதாவது
அரசு உதவி பெறும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

 ஆனால் அரசு மருத்துவமனை கல்லூரியில் பணிபுரியும் மருத்துவ மாணவர்களுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை.

எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு பயிற்சி செய்யும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதை ரூ.30 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். ஊக்கத்தொகையையும் அதிகரிக்க வேண்டும். 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைத்து தரப்படுகிறது. அதை ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் அதிகரித்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story