ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:14 PM IST (Updated: 14 Jun 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ஜெயந்தி (வயது 20). இவர் கடந்த 12-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவருடைய தாய் செல்வி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில்  புகார் கொடுத்தார்.

புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை ந டத்தினர். விசாரணையில் ஜோலார்பேட்டை அடுத்த பாய்ச்சல் பள்ளி வட்டம் பகுதியை சேர்ந்த ராஜ்குட்டி மகன் சுந்தர் (26) என்பவரை காதலித்து வந்ததும்,  இருவரும் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

 இந்தநிலையில் நேற்று மாலை இருவரும் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து போலிசார், இருவரின் பெற்றோரை வரவழைத்து பேசினர். அப்போது ஜெயந்தி காதல் கணவனுடன் செல்வதாக கூறியதால், போலீசார் அறிவுரை வழங்கி, காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Next Story