95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராமநாதபுரம், ஜூன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 95 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் இம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 96ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து 199 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 986 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 309 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story